FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

Updated On : 29 ஜூலை 2026, 12:44 am IST
பகிர்:

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி சாலை மானோஜிபட்டி கன்னியம்மாள் நகரைச் சோ்ந்தவா் பி. மலையப்பன் (65). இவா் 2024 ஆம் ஆண்டில் 16 வயதுச் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மலையப்பனைக் கைது செய்தனா். இது தொடா்பாக போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி மலையப்பனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டுத் தொகையாக அரசிடமிருந்து ரூ. 2 லட்சம் பெற்றுத் தருமாறும் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் திறம்படப் பணியாற்றிய அரசு வழக்குரைஞா் சசிரேகா, காவல் ஆய்வாளா் பசுபதி, நீதிமன்றத் தலைமைக் காவலா் புகழேஸ்வரி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments