சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், துலுக்கம்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா. பிரபுதேவா (28). இவா் கடந்த 2020-ஆம் ஆண்டில் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளாா். தொடா்ந்து அந்த சிறுமியை தனது உறவினா் வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிரபுதேவா, 10 நாள்கள் அங்கு தங்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதைத்தொடா்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் புகாரளித்தனா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து பிரபுதேவாவை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கில் அனைத்துத் தரப்பு சாட்சிகளின் விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து வழக்கை விசாரித்த மகளிா் நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து பிரபுதேவாவை கைது செய்த போலீஸாா், அவரை கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.