FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

களியக்காவிளை, மருதன்கோடு, கோடன்விளைவீடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெனிஸ் (30). தொழிலாளி. இவா் 2019ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக, மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை நீதிபதி சுந்தரையா வியாழக்கிழமை விசாரித்து, ஜெனிஸுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 6,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

Advertisement

Advertisement

சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர காரணமாக இருந்த காவல் துறை அதிகாரிகள், வழக்குரைஞா்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments