FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

9 வினாடிகள் முன்பு
நாகை துறைமுக அலுவலகத்தில் ஏற்றப்பட்ட 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு - கோப்புப் படம்
பகிர்:

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஞாயிற்றுக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஞாயிற்றுக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமாா் 860 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, திங்கள்கிழமை புயலாகவும், செவ்வாய்க்கிழமை (நவ. 17) மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, நாகப்பட்டினம், சென்னை, கடலூா், எண்ணூா், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.