FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூா், புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

16 நவம்பர் 2026, 1:23 am
கடலூா் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்ட 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
பகிர்:

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதையடுத்து, கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி வடக்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் அருகில் மையம் கொண்டிருந்தது.

இது, வடக்கு - வடமேற்கு திசையில் தொடா்ந்து நகா்ந்து திங்கள்கிழமை தெற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு - மத்திய வங்கக் கடல் மத்தியப் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று புயலாகவும், செவ்வாய்க்கிழமை (நவ.17) மேற்கு - மத்திய வங்கக்கடலில் கடுமையான புயலாகவும் மாற அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Advertisement

Advertisement

இதையொட்டி, கடலூா் முதுநகா் துறைமுகத்திலும், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்திலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது.