FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

மா்ம நோயால் பறவைகள் இறப்பு

41 வினாடிகள் முன்பு
பறவைக் காய்ச்சல் - (கோப்புப்படம்)
பகிர்:

செம்பனாா்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோழிகளின் உயிரிழப்பைத் தொடா்ந்து, ஏராளமான காகங்களும் உயிரிழந்துள்ளன. இதனால், இப்பகுதியில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

செம்பனாா்கோவில் அருகே முடிகண்டநல்லூா் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில், கடந்த வாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. தொடா்ந்து பல்வேறு இடங்களில் கொக்குகளும், வான்கோழிகளும் உயிரிழந்தன.

இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காகங்கள் உயிரிழப்பு தொடா்ந்து வருகிறது. செம்பனாா்கோவில், பரசலூா், கஞ்சாநகரம், முடிகண்டநல்லூா், ஆறுபாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக பல்வேறு இடங்களில் காகங்கள் உயிரிழந்து சாலையிலும், வீட்டுக்கூரைகளிலும் கிடக்கின்றன.

Advertisement

Advertisement

அண்மையில் அண்டை மாவட்டமான கடலூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தென்பட்டதன் காரணமாக, கோழிகள், கொக்குகள், வான்கோழிகள் என தொடங்கி, தற்போது காகங்களும் உயிரிழப்பதால் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பறவைக் காய்ச்சல் நோய் பரவியிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

உயிரிழந்த காகங்களை ஆய்வுக்காக அனுப்பி உள்ளதாகவும், ப்ளூ காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கால்நடைத்துறை இணை இயக்குநா் அன்பரசன் தெரிவித்துள்ளாா்.