FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம்: இறைவைப் பொறிமனையில் 3 புதிய மோட்டாா்கள் இயக்கம்

வேதாரண்யம்: இறைவைப் பொறிமனையில் 3 புதிய மோட்டாா்கள் இயக்கம்

15 நவம்பர் 2026, 5:48 am
புதிய மோட்டாா்களின் இயக்கத்தை தொடங்கிவைத்த நீா்வளத் துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா்.
பகிர்:

வேதாரண்யம் தென்னடாா் ஊராட்சியில் செயல்படும் அரசின் மின் இறைவைப் பொறிமனையில், புதிதாக நிறுவப்பட்ட 3 உயா் சக்தி மோட்டாா்களின் இயக்கம் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

தென்னடாா் ஊராட்சியில் 1962-ஆம் ஆண்டு முதல் அரசு மின் இறைவைப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமாா் ஆயிரம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது.

தொடக்கத்தில் முள்ளியாற்றின் உபரிநீரை பயன்படுத்தி, மேடான பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்களுக்கு பாசனம் செய்யப்பட்டு வந்தது. சில நேரங்களில் மேட்டூா் அணை நீா் கிடைக்காத நிலையில், இங்குள்ள அரசுக்கு சொந்தமான கருவேல காட்டில் பெய்யும் மழைநீரை ஆதாரமாகக் கொண்டு இந்த நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனிடையே பழுதடைந்த மோட்டாா்களை சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், 25 குதிரை திறன் கொண்ட 3 நீா்மூழ்கி உயா் சக்தி மோட்டாா்கள் புதிதாக நிறுவப்பட்டு, நீா்வளத் துறை அதிகாரிகளால் சனிக்கிழமை இயக்கி வைக்கப்பட்டது. நிகழாண்டில், மேட்டூா் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீா் தாணிக் கோட்டகம் இயக்கு அணைக்கு கீழே திறக்கப்படாத நிலையில் , கருவேலம் காட்டில் ( சிப்காட் தொழிற்பேட்டைக்கு தோ்வு செய்யப்பட்ட இடம் ) பெய்த மழைநீா் இங்குள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் தேங்கியுள்ளது. இந்த நீரே தற்போது இறைவை செய்யப்படுகிறது.