நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து
நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை, தனியாா் கப்பல் நிறுவனத்தின் சாா்பில் ’சிவகங்கை’ பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ‘அக்வான்’ புயல் காரணமாக வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து, பயணிகள், கப்பல் பணியாளா்கள் மற்றும் கப்பலின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, நாகை - காங்கேசன்துறை இடையேயான கப்பல் போக்குவரத்து திங்கள்கிழமை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிா்வாகம் அறிவித்துள்ளது.
புயல் கரையைக் கடந்து, வானிலை சீரடைந்ததும் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.