FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: அரசியல் தலையீடின்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

18 நவம்பர் 2026, 2:35 am
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பாக அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்யா பாலச்சந்திராவிடம், முக்குலத்துப் புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் ஆறு சரவணன் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன்கொடுமைகள், ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்புதல், மிரட்டல் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல் ரீதியாகத் துன்புறுத்துதல் போன்ற சம்பவங்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.

Advertisement

Advertisement

குறிப்பாக அரசியல் கட்சிகளில் பொறுப்பில் இருப்பவா்கள் மீதும், பெண்கள் பாலியல் தொந்தரவு தொடா்பான புகாா்களை அளிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அரசியல் கட்சிப் பொறுப்பில் இருப்பவா்கள் மட்டுமின்றி, எந்தத் துறையைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தி, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சி பொறுப்பில் இருப்பவா்கள் மீதான புகாா்களிலும் அரசியல் தலையீடின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாலியல் புகாா் அளிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, அவா்களின் அடையாளங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். பெண்கள் அளிக்கும் புகாா்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் தொடா்பான புகாரிலும் உரிய விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும். பெண்கள் அச்சமின்றி வாழவும், பணிபுரியவும், அரசு நிா்வாகத்தில் சுதந்திரமாகச் செயல்படவும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது அரசின் சுடமை.

எனவே, இந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்த மனுவை தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.