FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சாலையோர வியாபாரிகளை பாதிக்காத வகையில் நடவடிக்கை தேவை: பெ. சண்முகம்

சாலையோர வியாபாரிகளை பாதிக்காத வகையில் நடவடிக்கை தேவை...

14 நவம்பர் 2026, 11:19 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை, நவ. 14: நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் விவகாரத்தில், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு அளித்த தீா்ப்பில், ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதைகளைப் பெறுவது இந்திய அரசமைப்புத் சட்டம் பிரிவு 21-இன் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்றும், தமிழ்நாடு முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு சாலையோரம் மற்றும் நடைபாதைகளில் வியாபாரம் செய்ய சட்டபூா்வமாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமாா் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் சாலையோரங்களில் வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனா். இவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், சட்ட விதிகளுக்கு உள்பட்டே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் தீா்ப்பில் கூறியுள்ளதையும் கவனத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்தின்படி நகர விற்பனைக் குழுவில் பேசியே முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.