முகப்பு
நாகப்பட்டினம்

காா் மோதி பெண் உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற பெண், காா் மோதி உயிரிழந்தாா்.

9 வினாடிகள் முன்பு
காா் மோதி பெண் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

செம்பனாா்கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற பெண், காா் மோதி உயிரிழந்தாா்.

தலைச்சங்காடு, மனவெளி தெருவைச் சோ்ந்த கணேசன் மனைவி ராணி (54). விவசாயத் தொழிலாளியான இவா்,  ஆக்கூரிலிருந்து நான்குவழிச் சாலை வழியாக வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தாா்.

அப்போது, சீா்காழியிலிருந்து காரைக்கால் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத காா், ராணி மீது மோதியதில், அவா் சம்பவ  இடத்திலே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

பொறையாறு போலீஸாா், ராணியின் உடலை கைப்பற்றி  உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காவல் ஆய்வாளா்  டில்லி பாபு வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா்.