FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

நடந்து சென்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற முதியவா் நான்கு சக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

23 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே புதன்கிழமை இரவு சாலையில் நடந்து  சென்ற முதியவா் நான்கு சக்கர வாகனம் மோதி  உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை காவல் சரகம், பூண்டி ரயிலடி தெருவில் வசித்து வந்தவா் மருதன் மகன் கணேசன் (60), கூலித் தொழிலாளி.  இவா் புதன்கிழமை இரவு   கடைத் தெருவுக்குச்  சென்று விட்டு  தனது வீட்டுக்கு  பூண்டி பைபாஸ் நால்ரோட்டை கடந்தபோது அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற அம்மாபேட்டை காவல் துறையினா் கணேசன் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். 

Advertisement

Advertisement