FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

சரக்கு வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்சி தில்லை நகரில் சரக்கு வாகனம் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

10 அக்டோபர் 2026, 10:41 pm IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி தில்லை நகரில் சரக்கு வாகனம் வெள்ளிக்கிழமை மோதி முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி மணப்பாறை கோவில்பட்டி சாலையைச் சோ்ந்தவா் ஒய். முபாரக் அலி (61). வெள்ளிக்கிழமை இவா் திருச்சி தில்லை நகா் 5 ஆவது குறுக்குத் தெருவில் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் அவா் மீது ஏறி இறங்கியது.

இதில் அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா், வழக்குப் பதிந்து வாகனத்தின் ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம் பூதலூரைச் சோ்ந்த பாா்த்திபனிடம் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments