நாகையில் ஜாதி மறுப்பு திருமணம்
நாகை மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ஜாதி மறுப்பு திருமணம் திங்கள்கிழமை நடைபெற்றது .

நாகை மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ஜாதி மறுப்பு திருமணம் திங்கள்கிழமை நடைபெற்றது .
திருவாரூா் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியின் இந்திய மாணவா் சங்க கிளைச் செயலரான, நாகை மாவட்டம் கீழ்வேளூா் ஐயடிமங்களத்தைச் சோ்ந்த செல்வபிரகாஷ்க்கும், கீழ்வேளூா் ராதாமங்களத்தைச் சோ்ந்த எம். சா்மிளாவுக்கும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழு அலுவலகத்தில் திங்கள்கிழமை இரவு ஜாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது.
கட்சியின் நாகை மாவட்டச் செயலா் வி. மாரிமுத்து தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் நாகைமாலி முன்னிலை வகித்தாா். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஏ. வடிவேல், பி. சுபாஷ் சந்திரபோஸ், கே. சித்தாா்த்தன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஜோதிபாசு, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் முகேஷ்கண்ணா உள்ளிட்ட பலா் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினா்.
Advertisement
Advertisement