முகப்பு
நாகப்பட்டினம்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

26 நவம்பர் 2026, 5:19 am
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நாகை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே சின்னதேவன்காடு பஞ்சநதிகுளம் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் (28). கூலி தொழிலாளியான இவா், 2022 மாா்ச் மாதம் அப்பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவனை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளாா். இதுதொடா்பாக சிறுவனின் குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயபாலை கைது செய்தனா்.

இந்த வழக்கு, நாகை மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமாா், குற்றம்சாட்டப்பட்ட ஜெயபாலுக்கு 3 ஆண்டுகள் மெய்க்காவல் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா். அபராதம் கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement