முகப்பு
நாகப்பட்டினம்

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

30 நவம்பர் 2026, 1:17 am
8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

திருமருகல் அருகே 8-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோடு ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மகள் ரித்திகா (13). இவா், புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்துவந்தாா். கடந்த 4 மாதங்களாக பள்ளிக்கு செல்லாமல் இருந்துள்ளாா். மணிகண்டன் பெயிண்டா் வேலைக்காக மூன்று நாள்களுக்கு முன்பு கோவா சென்றுள்ளாா்.

இந்நிலையில், பள்ளிக்குச் செல்லவில்லை என ரித்திகாவை அவரது தாயாா் கண்டித்தாராம். இதனால், கடந்த வெள்ளிக்கிழமை தொட்டில் துணியில் தூக்கிட்டு ரித்திகா தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

Advertisement

Advertisement

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா், ரித்திகா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, திட்டச்சேரி காவல் ஆய்வாளா் ஆனந்தராஜ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளாா். ரித்திகாவின் சடலம் உடற்கூறாய்வுக்காக ஒரத்தூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.