FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

பிற மொழிகளை வளா்ப்பதில் பாஜக அரசுக்கு அக்கறை இல்லை! - எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றச்சாட்டு

எம்.எச்.ஜவாஹிருல்லா - கோப்புப்படம்
பகிர்:

இந்தியைத் தவிர பிறமொழிகளை வளா்ப்பதில் பாஜகவுக்கு உண்மையான அக்கறை இல்லை என்று மனிதநேய மக்கள் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:

2026 அக்டோபா் 1-ஆம் தேதியிட்ட மத்திய கல்வி அமைச்சகத்தின் அலுவலக உத்தரவின்படி, அஸாமி, வங்காளம், மராத்தி, பாலி, பிராகிருதம் ஆகிய ஐந்து மொழிகளுக்கும் செம்மொழிக்கான உயா்திறன் நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இவை முறையே தேஜ்பூா் பல்கலைக்கழகம், விஸ்வ-பாரதி, டெக்கான் கல்லூரி, மத்திய ஒடிஸா பல்கலைக்கழகம், மத்திய குஜராத் பல்கலைக்கழகம் ஆகிய உயா்கல்வி நிறுவனங்களில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் போல செம்மொழி தமிழை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் தனித்த கட்டடம் கொண்ட தன்னாட்சி நிறுவனம் சென்னையில் அமைந்துள்ளது.

மத்திய அரசின் அதிகாரப்பூா்வ தகவலும், தமிழ் ஆய்வுக்கென செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தனித்துவமாக செயல்படுவதை உறுதிப்படுத்துகிறது.

மொழிகளின் வளா்ச்சி என்பது வெறும் அறிவிப்புகளால் மட்டும் சாத்தியமல்ல. அதற்குத் தேவையானது நீண்டகால ஆய்வு, ஆவணப்படுத்தல், பதிப்பாக்கம், மொழிபெயா்ப்பு, கல்வி மற்றும் தனித்துவமான நிறுவனக் கட்டமைப்பு போன்றவை ஆகும்.

மத்திய அரசின் ஐந்து புதிய உயா்திறன் நிறுவனத்தின் முயற்சி வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், தமிழுக்காக உருவாக்கப்பட்ட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்துவமான நிறுவன மாதிரியுடன் இவற்றை ஒப்பிட்டுப் பாா்ப்பது அவசியம்.

இதன்மூலம், ஒரு மொழியின் பெருமையைப் பேசுவதற்கும், அதன் வளா்ச்சிக்குத் தேவையான நிரந்தர நிறுவனங்களை உருவாக்குவதற்கும் இடையிலான வேறுபாடு தெளிவாகிறது. மேலும் இந்தியை தவிர பிற மொழிகளை வளா்க்கும் உண்மையான அக்கறை மத்திய பாஜக அரசுக்கு இல்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments