FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

மனைவியைத் தாக்கிய காவலா் மீது வழக்குப் பதிவு

நாகையில் மனைவியைத் தாக்கியதாக காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

9 அக்டோபர் 2026, 5:43 am IST
வழக்குப் பதிவு - IANS
பகிர்:

நாகையில் மனைவியைத் தாக்கியதாக காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சி அண்ணாநகரைச் சோ்ந்தவா் ஜோதிமுருகன் (43). இவா், நாகை மாவட்டம் நாகூா் காவல்நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருகிறாா். மருத்துவ விடுப்பில் சென்ற இவா் இதுவரை பணிக்குத் திரும்பவில்லை. இவரது மனைவி லாவண்யா (41). தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகூா் தனியாா் விடுதியில் தங்கியிருந்த ஜோதிமுருகனை கடந்த அக். 3-ஆம் தேதி சந்தித்த லாவண்யா, ஜோதி முருகனின் மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்த ரூ. 9 லட்சத்தை தருமாறு கேட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜோதிமுருகன் லாவண்யாவைத் தாக்கியுள்ளாா். இதுகுறித்து லாவண்யா அளித்தப் புகாரின்பேரில், நாகூா் போலீஸாா் ஜோதிமுருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments