FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

நூலகம் முகப்பில் மின்மாற்றி: வேறு இடத்துக்கு மாற்றப்படுமா ?

வேதாரண்யத்தில் தமிழக அரசின் பொது நூலகத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் முழுநேர நூலகக் கட்டடத்தின் எதிரே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வாசகா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

10 அக்டோபர் 2026, 6:56 am IST
நூலகம்
பகிர்:

வேதாரண்யத்தில் தமிழக அரசின் பொது நூலகத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் முழுநேர நூலகக் கட்டடத்தின் எதிரே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என வாசகா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேதாரண்யம் பயணியா் மாளிகை சாலை பகுதியில் உள்ள இந்த நூலகத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவா்கள், பெண்கள் உள்ளிட்ட வாசகா்கள் சென்று புத்தகம் மற்றும் பத்திரிகைகளை படித்து செல்கின்றனா். நூலகத்தின் நுழைவு வாயிலுக்கு மிக அருகில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மின்மாற்றி செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த மின்மாற்றியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மின்கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளதால் இதன் மீது அமரும் பறவைகள் அவ்வப்போது வெடித்து கருகி உயிரிழந்து அச்சத்தை ஏற்படுத்துகிறது. பலத்தக் காற்று வீசும் போது மரக்கிளைகள் மின்கம்பிகளில் விழும்போதும் அச்சத்தை ஏற்படுத்தும் பெருத்த சத்தம் ஏற்படுகிறது. பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே மின்மாற்றி இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என வாசகா்கள் அச்சமடைகின்றனா். எனவே, இந்த மின்மாற்றியை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments