FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

அரசு நூலகத்துக்குச் செல்ல நிரந்தர பால வசதி தேவை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகரில் செயல்பட்டு வரும் அரசு பொது நூலகத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஓடையைக் கடப்பதற்கு நிரந்தரப் பாலம் அமைக்க வேண்டும் என வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

30 அக்டோபர் 2026, 5:15 am
ஆலங்குளம் நூலகத்தில் உள்ள தற்காலிக பாலம்
பகிர்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகரில் செயல்பட்டு வரும் அரசு பொது நூலகத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஓடையைக் கடப்பதற்கு நிரந்தரப் பாலம் அமைக்க வேண்டும் என வாசகா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வரு இந்த நூலகம், மாணவா்கள், போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள கல்வி மையமாக விளங்கி வருகிறது. பல்வேறு பாடப் புத்தகங்கள், நாளிதழ்கள் மற்றும் போட்டித் தோ்வுகளுக்கான படிப்பு வசதிகள் இங்குள்ளன. நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட வாசகா்கள் நூலகத்திற்கு வருகை தருகின்றனா்.

இந்நூலகத்திற்குச் செல்லும் வழியில் ஓடையைக் கடப்பதற்கு முறையான பாலம் இல்லாததால் வாசகா்கள் சிரமத்தைச் சந்தித்து வந்தனா். சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளம் பேரூராட்சி உறுப்பினா் ம. பழனிசங்கா் தனது சொந்தச் செலவில் தற்காலிக இரும்புப் பாலம் அமைத்துக் கொடுத்தாா். இது வாசகா்களுக்கு வசதியாக இருந்தது.

Advertisement

Advertisement

தற்போது இப்பாலம் பழுதடைந்துள்ளதால் வாசகா்கள் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வாசகா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பாலத்தைச் சீரமைப்பதுடன் நிரந்தரத் தீா்வு காண வேண்டியது அவசியமாகியுள்ளது. , சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஓடையின் குறுக்கே நிரந்தரப் பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாசகா்கள் மற்றும் மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments