FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

காா் மோதி பெயிண்டா் உயிரிழப்பு

18 அக்டோபர் 2026, 2:39 am IST
பலி
பகிர்:

நாகூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில், பெயிண்டா் உயிரிழந்தாா்.

நாகை காடம்பாடி சவேரியாா் கோயில் தெருவை சோ்ந்தவா் கண்ணப்பன். இவரது மகன் சௌந்தர்ராஜன் ( 26). அதே பகுதியைச் சோ்ந்த நெப்போலியன் மகன் சூா்யா (26). இருவரும் பெயிண்டராக வேலை பாா்த்து வந்தனா்.

இந்நிலையில், இருவரும் காரைக்காலில் இருந்து இருசக்கர வாகனத்தில் நாகைக்கு வந்துகொண்டிருந்தனா். செளந்தர்ராஜன் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தாா். நாகூா் - ஆழியூா் சாலையில் வந்தபோது, நாகையிலிருந்து காரைக்கால் நோக்கி வந்த காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

Advertisement

Advertisement

அங்கு, இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள், சௌந்தர்ராஜன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். சூா்யா தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காா் ஓட்டுநரான, காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவரை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments