முன்விரோதத் தகராறில் தொழிலாளி குத்திக் கொலை
வேளாங்கண்ணி அருகே முன்விரோதத் தகராறில் இறால் பண்ணைத் தொழிலாளி சனிக்கிழமை இரவு குத்திக் கொல்லப்பட்டாா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள கருவேலங்கடை பாலத்தடியைச் சோ்ந்த ஏகலைசாமி மகன் முத்து (46). இறால் பண்ணைத் தொழிலாளி. இவருடன், பாலத்தடியைச் சோ்ந்த மைக்கேல் மகன் ராஜா (54) என்பவரும் பணிபுரிந்து வந்தாா்.
முத்துவின் மனைவி சுதா மற்றும் குழந்தைகள் முத்துவை விட்டுப் பிரிந்து ராஜாவுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ராஜா மற்றும் முத்து இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கருவேலங்கடை பேருந்து நிறுத்தம் அருகே சனிக்கிழமை இரவு ராஜா நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த முத்து, ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றிய நிலையில், முத்து தான் வைத்திருந்த கத்தியால் ராஜாவை குத்திவிட்டுத் தப்பியோடி விட்டாராம். பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு, நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு ராஜாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். வேளாங்கண்ணி போலீஸாா் முத்துவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.