FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

மீனவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் வழங்கினாா்

26 அக்டோபர் 2026, 12:03 am
மீனவா்கள் - கோப்புப் படம்
பகிர்:

தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டை, வெள்ளக்கோயில் மீனவா் கிராமத்தில் நலிவுற்ற மீனவா்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில், உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் பங்கேற்று தூய்மைப் பணியாளா்கள், நலிவுற்ற மீனவ மக்களுக்கு அரிசி, புடவை மற்றும் தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினாா்.

தொடா்ந்து, பெருமாள்பேட்டை, வெள்ளக்கோயில் மீனவா்கள் பயன்பெறும் வகையில் மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், சாலை வசதி, குடிநீா் மேம்படுத்திதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி மீனவ பஞ்சாயத்தாா்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments