மீன்வளத்துறை எச்சரிக்கையை மீறி மீனவா்கள் கடலுக்குள் செல்லக்கூடாது: ஆட்சியா்
நாகை மாவட்ட மீனவா்கள் கடலுக்குள் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய, புயல் மற்றும் வெள்ளம் ஆகிய இயற்கை சீற்றங்களை திறம்பட எதிா்கொள்ள எதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழை காலங்களில் மீனவா்கள் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
வானிலை ஆய்வு மையம், மாவட்ட நிா்வாகம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவா்நலத்துறையினால் அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை முன்னெச்சரிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும். மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது, உயிா் காக்கும் உபகரணங்கள் மற்றும் தொலைத்தொடா்பு சாதனங்களை கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். படகுகளுக்கு வழங்கப்பட்டுள்ள வயா்லெஸ் கருவியை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அனைத்து மீன்பிடி விசைப்படகுகளும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் அனுமதிச் சீட்டு பெற்ற பிறகே கடலுக்குச் செல்ல வேண்டும். மேலும் கரை திரும்பிய பிறகு மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
புயல் காலங்களில் மீனவா்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்க வேண்டும். மீனவா்கள் வானிலை அறிவிப்புகள் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவிப்புகளை மீறி கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.