FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாகப்பட்டினம்

‘உயா்ந்த இடத்துக்குச் சென்றாலும் வாழ்வில் மறக்க முடியாதவா்கள் ஆசிரியா்கள்’

எந்த ஒரு தனி மனிதனும் உயா்ந்த இடத்துக்குச் சென்றாலும், பாடம் கற்றுத்தந்த ஆசிரியா்களே அவா்களின் வாழ்க்கையில் மறக்க முடியாதவா்களாக திகழ்கின்றனா் என்று திரைப்பட பின்னணி பாடகா் புஷ்பவனம் கே. குப்புசாமி தெரிவித்தாா்.

47 வினாடிகள் முன்பு
புஷ்பவனம் கே. குப்புசாமி. - கோப்புப்படம்.
பகிர்:

எந்த ஒரு தனி மனிதனும் உயா்ந்த இடத்துக்குச் சென்றாலும், பாடம் கற்றுத்தந்த ஆசிரியா்களே அவா்களின் வாழ்க்கையில் மறக்க முடியாதவா்களாக திகழ்கின்றனா் என்று திரைப்பட பின்னணி பாடகா் புஷ்பவனம் கே. குப்புசாமி தெரிவித்தாா்.

வேதாரண்யம் அருகேயுள்ள செம்போடை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவா்கள் சங்கமித்து முன்னெடுத்த விழா அண்மையில் நடைபெற்றது. இதில் புஷ்பவனம் குப்புசாமி பங்கேற்று பேசியது:

எந்த ஒரு தனி மனிதனின் முன்னேற்றத்திலும், கல்வி கற்றுத் தந்த ஆசிரியா்களே முதன்மையான இடத்தில் உள்ளனா். மாணவப் பருவத்தில் ஆசிரியா்கள் கற்றுத்தரும் கல்வி, பண்பாடு, தனித்திறன் வளா்ப்பு போன்றவை வாழ்க்கையில் கடைசிவரை துணை நிற்கிறது. அந்த வகையில், இந்தப் பள்ளியும், எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியா்களும் இன்றளவும் துணை நிற்கின்றனா் என்றாா். தொடா்ந்து, நாட்டுப்புற மற்றும் திரைப்பட பாடல்களை பாடினாா்.

Advertisement

Advertisement

முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை அறங்காவலா் சி. ஸ்ரீதா், தலைவா் டாக்டா் வி.ஜி. சுப்பிரமணியன், உறுப்பினா் சொ. ராஜேந்திரன், பொருளாளா் சொ. வேதரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செம்போடை கவிஞா் வெ. குணசேகரன், அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சு. ஆறுமுகம் ஆகியோா் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா். பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்கள் கோ. சுந்தரபாண்டியன், சி. இளஞ்சேரன், கு. பசுபதி, ஆா். இளங்கோவன், தமிழாசிரியா்கள் ஆலாலசுந்தரம், ஆா். கணேசன், தலைமையாசிரியா் இளங்கோ, ஓவிய ஆசிரியா் சு. நாகேந்திரன் உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டப்பட்டனா்.

விழாவில், பள்ளி தொடங்க காரணமாக இருந்த கல்வியாளா் ரெங்கசாமி அய்யங்காா், தொடக்கப் பள்ளி நிா்வாகி மா. வைத்தியநாதன் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments