கருணாநிதி நலம் பெறக் கோரி அவரது தாயார் நினைவிடத்தில் கூட்டுப் பிரார்த்தனை
திருவாரூர் அருகே திமுக தலைவர் மு. கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி மாணவர்கள் பங்கேற்ற கூட்டுப் பிரார்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அருகே திமுக தலைவர் மு. கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி மாணவர்கள் பங்கேற்ற கூட்டுப் பிரார்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திமுக தலைவர் மு. கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு இடங்களில் வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திருவாரூர் அருகே காட்டூரில் திமுக தலைவர் மு. கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவகத்தில், அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டும், திருவாரூருக்கு வந்து மக்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்க வேண்டும் என்று மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நினைவகத்தில் மாணவர்கள் மலர் தூவி பிரார்த்தனை செய்தனர். இதில், திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.