FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 5:57 am IST
பகிர்:

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ. 1,000, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ரூ.3,000,  9 முதல் பிளஸ் 2 வரை ரூ. 4,000, இளங்கலை பட்டப் படிப்புக்கு ரூ. 6,000, முதுகலை பட்டப்படிப்பு, தொழிற்நுட்பக் கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற் கல்விக்கு ரூ. 7,000 வழங்கப்படுகிறது.
மேலும், பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித்தொகையாக 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.3,000 (ஆண்டுக்கு),  இளங்கலை பட்டப் படிப்புக்கு ரூ. 5,000 (ஆண்டுக்கு), முதுகலை பட்டப் படிப்பு மற்றும் தொழிற்நுட்ப கல்விக்கு ரூ. 6,000 (ஆண்டுக்கு) வழங்கப்படுகிறது. 2018-19-ஆம் நிதியாண்டு திட்டத்தின்கீழ் பயனடைய அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு உதவிப் பெறும் கல்லூரிகள், தொலைதூரக் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள் முந்தைய கல்வி ஆண்டு இறுதித் தேர்வில் குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
மாணவர் பிறத் துறைகளில் கல்வி உதவித் தொகை ஏதும் பெறவில்லை என்று தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடம் பெற்ற சான்றிதழ் அளிக்க வேண்டும். விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு 31.10.2018 க்குள் அனுப்பி வைத்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments