FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருவாரூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

திருவாரூர் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், பேருந்து நிலையம், தஞ்சை சாலை, பழைய

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திருவாரூர் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், பேருந்து நிலையம், தஞ்சை சாலை, பழைய நாகை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைவர் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் கே. திருநாவுக்கரசு, இணைச் செயலர் என். காளிமுத்து, இயக்குநர் தெட்சிணாமூர்த்தி, பொதுச் செயலர் ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக அரசு நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிக்குள்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை திடீரென நிலவரியை உயர்த்தியிருப்பதை ரத்து செய்து விட்டு உரிய உள்ளாட்சி அமைப்புகள் பொறுப்பேற்ற பிறகே அந்தந்த பகுதிக்கேற்ப வரி நிர்ணயம் செய்ய வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் நடத்தப்பட வேண்டிய போக்குவரத்து ஒழுங்கு ஆலோசனைக் குழுக் கூட்டத்தை ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டும். நுகர்வோர் நலன் காக்கவும், பாதிக்கப்பட்ட நுகர்வோர்கள் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு முடிவுற்ற நிலையில் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட பரிகாரம் மற்றும் நிவாரணம் அளிக்காத நிறுவனம் மீது நுகர்வோர் நீதிமன்றம் அளிக்கும் பிடி ஆணையை போலீஸார் நிறைவேற்ற வேண்டும்.
திருவாரூர் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால், பேருந்து நிலையம், தஞ்சை சாலை, பழைய நாகை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவு நீர் முறையாக அகற்றப்படாததால் சாக்கடைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி அதிகமாகி தொற்றுநோயாலும் கொசுக்கடியாலும் மக்கள் பாதிக்கப்படுவதால், நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தஞ்சை - நாகை சாலை பணிகளை விரைவில் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments