சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
மன்னார்குடி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது முதியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 75 வயது முதியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
வடுவூர் வடபாதி பெரியார்நகர், ஏரிக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ரா.சின்னப்பன் (75). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 3-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை அருகில் உள்ள வயல் பகுதிக்கு சனிக்கிழமை மாலை அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்தாராம்.
இதுகுறித்து, வடுவூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, சின்னப்பனை
கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.