மாவட்ட நூலகத்தில் நூல் கலந்தாய்வு
திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நூல் கலந்தாய்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் நூல் கலந்தாய்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்தில் வாசக சாலை அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் உத்தம சோழனின் குருவி மறந்த கூடு சிறுகதை தொகுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது . இதில், பாசன ஆய்வாளர் ( ஓய்வு) சே. ஜோசப்ராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். போட்டி, தேர்வுகளுக்கு தயாராகும் மாணவி சரண்யா பங்கேற்று வாசகர் பார்வையில் என்ற தலைப்பில் நூல் விமர்சனம் செய்தார். எழுத்தாளர் உத்தமசோழன் பங்கேற்று ஏற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி லயன்ஸ் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், பொறியாளர் செல்வகணபதி, நூலகர்கள் வடிவேலு, மா. ஆசைத்தம்பி, வாசக சாலை நிர்வாகி நரேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.