மேலவாசல் மகளிர் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த மேலவாசல் சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கல்லூரியில், மத்திய அரசின் சார்பில்
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த மேலவாசல் சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கல்லூரியில், மத்திய அரசின் சார்பில், வெள்ளையனே வெளியேறு மற்றும் சுதந்திர தின விழா கொண்டாட்ட சிறப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் க. மோகனா தலைமை வகித்தார். தாளாளர் க. சதாசிவம் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையர் நெ. கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டார். கருத்தரங்கின் தலைப்பையொட்டி, பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழிப்புணர்வு உதவி அலுவலர் சு. அருண்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சௌ. மணிமாறன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.