FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டிச.22-இல் வேலைவாய்ப்பு முகாம்

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ரோட்டரி சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (டிச.22) நடைபெற உள்ளது.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ரோட்டரி சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (டிச.22) நடைபெற உள்ளது.
இதுகுறித்து ரோட்டரி சங்கத் தலைவர் டி.அண்ணாதுரை வெளியிட்ட அறிக்கை:
ரோட்டரி சங்கம் சார்பில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் இந்த முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான அனைத்துப்பிரிவு பணியாளர்களையும் தேர்வு செய்ய உள்ளன. 
இதில், பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, அனைத்து வகை பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் பங்கேற்கலாம். வேலைவாய்ப்பு முகாமுக்கு 18 முதல் 25 வயது வரையும், செக்யூரிட்டி வேலைக்கு 22 முதல் 45 வயது வரையும் உள்ளவர்கள் வரலாம். முகாமுக்கு வருவோர் கல்விச்சான்றுகளின் நகல்கள், ஆதார் சான்று நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 8 ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி இளைஞர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments