FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

உதயமார்த்தாண்டபுரம் ஏரி  சீரமைப்புப் பணி:  ஆட்சியர்ஆய்வு

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் ஏரியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்

Updated On : 8 ஜூன் 2018, 1:18 am IST
பகிர்:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகேயுள்ள உதயமார்த்தாண்டபுரம் ஏரியில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார். 
உதயமார்த்தாண்டபுரம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணி ரூ.1.5 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியது: முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட உதயமார்த்தாண்டபுரம் ஏரியின் நீர்வரத்து வாய்க்கால் 11 கி.மீட்டர் அளவுக்கு தூர்வாரப்படும். அத்துடன், ஏரியைச் சுற்றி தடுப்புச் சுவர் கட்டுதல், 2 கி.மீட்டர் நீளத்துக்கு ஏரிக் கரைகளை உயர்த்தி சீரமைத்தல், 2 மதகுகளை புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் 1,020 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என்றார் ஆட்சியர். இந்த ஆய்வுப் பணியில், மாவட்ட ஆட்சியருடன் வெண்ணாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் திருவேட்டைசெல்வன், உதவி செயற்பொறியாளர் மூர்த்திராஜன், வட்டாட்சியர் கே. மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments