காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
அலுவலக உதவியாளருக்கு இணையான அடிப்படை ஊதியம் மற்றும் அரசு ஊழியர்கள் பெறும் அனைத்து சலுகைகளும் கிராம உதவியாளர்களுக்கும் வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெற்றியில் பட்டை நாமம் போட்டு, தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. மனோகரன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.