FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

குடிநீர்த் தட்டுப்பாட்டை சரிசெய்யக் கோரி பெண்கள் சாலை மறியல்

நீடாமங்கலம் அருகே குறைந்த மின் அழுத்தம் காரணமாக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளில் நீர் நிரப்ப இயலாத சூழ்நிலையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன்

Updated On : 25 மே 2018, 1:03 am IST
பகிர்:

நீடாமங்கலம் அருகே குறைந்த மின் அழுத்தம் காரணமாக மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளில் நீர் நிரப்ப இயலாத சூழ்நிலையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீடாமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள மின்மாற்றி வெடித்து பழுதானதால், அவ்வூரிலுள்ள மற்றொரு மின்மாற்றியைக் கொண்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதில், குறைந்த மின் அழுத்தமே கிடைப்பதால், விவசாய பம்பு செட்டுகளுக்கும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் நீர் ஏற்ற இயலாத நிலை ஏற்பட்டு, குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குடிநீர்த் தட்டுப்பாட்டில் தவித்த வந்த அனுமந்தபுரம் கிராம பெண்கள் உள்ளிட்டோர் ஊராட்சி முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் அனுமந்தபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வட்டாட்சியர் குணசீலி, கூடுதல் ஆணையர் ஞானம் ஆகியோர் தொலைபேசி மூலம் கிராம முக்கியஸ்தர்களிடம் பேசினர். அப்போது மின்சாரவாரிய அலுவர்களிடம் கூறி மின்மாற்றியை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன்பேரில், சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments