FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூர் மாவட்டத்தில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மே 28-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்

Updated On : 25 மே 2018, 1:03 am IST
பகிர்:

திருவாரூர் மாவட்டத்தில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மே 28-ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில், இளநிலை கல்வியியல் ஆசிரியர் பயிற்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வித்துறை மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், சேர்ந்து பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பத்துடன் சுய விவரக் குறிப்பு, இரண்டு மார்பளவு புகைப்படம், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றின் நகலுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், அறை எண். 6, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவாரூர்-610004 என்ற முகவரிக்கு நேரடியாக அல்லது தபால் மூலமாக மே 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments