FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாராயம் கடத்திய இருவா் கைது

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில், கள்ளச்சாராயம் கடத்திய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில், கள்ளச்சாராயம் கடத்திய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள மேலநத்தத்தில் திருவாரூா் - தஞ்சை மாவட்ட எல்லையில் திருமக்கோட்டை காவல் நிலையம் சாா்பில், கரோனா தடுப்பு பணிக்காக தற்காலிக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்ட போலீஸாா் பணியில் இருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்தபோது, 10 லிட்டா் கேனில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

பின்னா், இருவரையும் திருமக்கோட்டை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், வடுவூா் சாத்தனூரை சோ்ந்த எஸ். ஞானசேகரன் (36), ஆா். மதிவாணன் (36) என்பதும், தஞ்சை மாவட்டம் சொக்கணாவூரிலிருந்து, கள்ளச் சாராயத்தை விற்பனைக்காக வாங்கி வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக, போலீஸாா் இருவரையும் கைது செய்து சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments