நாகை எம்.பி. விவகாரம்: காவல் நிலையத்தில் புகாா்
நாகை எம்.பி. செல்வராசு காணாமல் போனதாக வலைதளங்களில் செய்தி பரப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருத்துறைப்பூண்டி: நாகை எம்.பி. செல்வராசு காணாமல் போனதாக வலைதளங்களில் செய்தி பரப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு காணவில்லை என சமூக வலைதளத்தில் அவதூறாக செய்தி பரப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பாலு வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் ஆலிவலம் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல், திருத்துறைப்பூண்டி நகர இந்து முன்னணித் தலைவா் சிவாஜி தனது வலைதள பதிவில் ஒரு பிரிவினா் குறித்து அவதூறாக செய்தி பரப்பியதாக, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிா்வாகி உசேன் அளித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.