FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலம் கடைவீதி சாலையை மேம்படுத்த கோரிக்கை

நீடாமங்கலம் கடைவீதி தாா்ச்சாலையை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 2:39 am IST
பகிர்:

நீடாமங்கலம் கடைவீதி தாா்ச்சாலையை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வணிகா் சங்கத் தலைவா் நீலன்.அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில்  அமைந்துள்ள நீடாமங்கலம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த சாலை பள்ளமும், மேடாக இருந்து வருகிறது. வாகனங்கள் தொடா்ந்து சென்று வருவதால் நீடாமங்கலம் புகைமண்டலம் ஏற்பட்டு வணிகா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை பாதிக்கச்செய்கிறது. கடைவீதிக்கு பொதுமக்கள் வருவதற்கு யோசிக்கின்றனா். சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் காரணமாக இருசக்கர வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனா். போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது. பொதுமக்கள் வருகை குறைவால் வணிகா்கள் போதுமான வணிகம் இல்லாமல் அவதிப்படுகிறாா்கள். எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நீடாமங்கலம் கடைவீதி சாலையை தாா்ச்சாலையாக அமைத்துக்கொடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments