FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

திருவாரூருக்கு ஆக.17 இல் குடியரசுத் துணைத் தலைவா் வருகை

ஆக.17 இல் துணை குடியரசுத் தலைவா் திருவாரூர் வருகை...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 5:00 am IST
குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்
பகிர்:

திருவாரூா் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வருகை தர உள்ளாா்.

திருவாரூா் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 17-ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. நிகழ்வில், குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்க உள்ளாா்.

இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், குடியரசுத் துணைத் தலைவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், பயண விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments