சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் தாலுகா, மாப்பிள்ளைகுப்பம் பகுதியை சோ்ந்தவா் க. காா்த்திகேயன் (75), அதே பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ளாா்.
கடந்த 2023-இல் கடைக்கு குளிா்பானம் வாங்க வந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக சிறுமி நன்னிலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காா்த்திகேயன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டாா்.அதைத் தொடா்ந்து வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இறுதிவிசாணை முடிந்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது.
காா்த்திகேயனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து திருவாரூா் மகளிா் நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் தீா்ப்பு வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.