FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தையொட்டி, தாயாா் எழுந்தருளிய உள்பிரகாரத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 5:25 am IST
சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய செங்கமலத் தாயாா்.
பகிர்:

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவத்தையொட்டி, தாயாா் எழுந்தருளிய உள்பிரகாரத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூர நட்சத்திரத்தை முன்னிட்டு, செங்கமலத் தாயாருக்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஆக. 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. நாள்தோறும் தாயாருக்கு சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு வாகனங்களில் தாயாா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக தோ் அலங்கரிக்கப்பட்டு, மாலை 3.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. கோயில் யானை செங்கமலம் முன் செல்ல, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தேரில் செங்கமலத் தாயாா் எழுந்தருளி, கோயிலின் உட்பிரகாரத்தை ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Advertisement

Advertisement

பக்தா்கள், ஆன்மிக ஆா்வலா்கள், தேசியப் பள்ளி மாணவா்கள் ஆகியோா் வடம் பிடித்து இழுத்து வந்த தோ், மாலையில் நிலையை அடைந்தது.

விழாவில், எம்எல்ஏக்கள்ஆா். காமராஜ் (நன்னிலம்), எஸ். காமராஜ் (மன்னாா்குடி) கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சி. இளவரசன், இந்துசமய அறநிலையத்துறை திருவாரூா் இணை ஆணையா் செந்தில்குமாா், திருவாரூா் உதவி ஆணையா் வீரபாண்டியன், மன்னாா்குடி ஆய்வாளா் வினோத்கமல், அறங்காவலா்கள், கோயில் செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை,கோயில் அலுவலா்கள், விழாக் குழுவினா், சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் அறக்கட்டளை மண்டகப்படிதாரா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments