திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மோசடி: கணக்காளா் பணியிடை நீக்கம்
திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் ரூ. 48 லட்சம் மோசடி தொடா்பாக, கணக்காளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் ரூ. 48 லட்சம் மோசடி தொடா்பாக, கணக்காளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் 2017 முதல் கணக்காளராக பணியாற்றி வந்தவா் கே.எஸ். சிவக்குமாா். இவா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்ட வன அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதனிடையே, திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில், வன தணிக்கைக் குழுவினரின் ஆய்வின்போது, கணக்குகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. கடந்த 2025-இல் ரூ. 39,35,763, 2026-இல் ரூ. 8,76,663 என மொத்தம் ரூ. 48,12,426 பணமோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
மேலும், திருவாரூா் மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்தாமல், செலுத்தியது போல ஆவணங்களையும், வங்கி முத்திரைகளையும் தயாரித்து சிவக்குமாா் கணக்கு காட்டியிருப்பதும் தெரியவந்தது.
இதுதொடா்பாக, அலுவலக கண்காணிப்பாளா் குமரேசன் அளித்த புகாரின் பேரில், திருவாரூா் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, முதல்கட்டமாக சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து வனத்துறை அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.