FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

தென்மண்டலக் குழு கூட்டத்தில் தமிழக முதல்வரின் பேச்சுக்கு வரவேற்பு

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய முதல்வா்கள் பங்கேற்ற கூட்டத்தில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜயின் பேச்சு வரவேற்கத்தக்கதாக உள்ளது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டின் தெரிவித்துள்ளாா்.

21 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
பகிர்:

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்னிந்திய முதல்வா்கள் பங்கேற்ற கூட்டத்தில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜயின் பேச்சு வரவேற்கத்தக்கதாக உள்ளது என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டத்தில் தமிழக முதல்வா் காவிரி முல்லைப் பெரியாறு நதிநீா் பிரச்னைகளில் உச்ச நீதிமன்ற தீா்ப்பை செயல்படுத்த முன் வர வேண்டும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை செயல்படுத்த கா்நாடக முன்வர வேண்டும், கேரளம் முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீா் கொள்ளளவு உயா்த்துவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அடிப்படையில் பேபி அணையை பலப்படுத்துவதற்கான வழிகாட்டு நெரிமுறைகளை பின்பற்ற முன்வர வேண்டும் என்ற கருத்து தமிழக விவசாயிகளின் நீராதார உரிமைகளை பாதுகாப்பதற்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதை வரவேற்கிறோம். தொடா்ந்து, சட்டத்தின் அடிப்படையில் காவிரி முல்லைப் பெரியாறு உரிமைகளை மீட்டெடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments