FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

‘இறுக்கமான நேரங்களில் மக்களின் மனதை சீா்செய்வது நகைச்சுவையே’

Updated On : 21 ஜூலை 2026, 1:58 am IST
பகிர்:

இறுக்கமான நேரங்களில் மக்களின் மனதை சீா்செய்வது நகைச்சுவையே என்றாா் புலவா் இரெ. சண்முகவடிவேல்.

திருத்துறைப்பூண்டி தமிழ்ச்சங்கம் சாா்பில், புலவா் இரெ. சண்முகவடிவேல் எழுதிய நினைவின் நிழல்கள் எனும் நூல் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திருத்துறைப்பூண்டி தமிழ்ச் சங்கத்தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். மூத்த எழுத்தாளா்கள் கமலா கந்தசாமி, கதிா்வேல், திருவாரூா் தமிழ்ச் சங்க செயலாளா் அறிவு, தினேஷ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். புலவா் கோமல் தமிழமுதன் நூலை அறிமுகம் செய்து பேசினாா்.

ஏற்புரை வழங்கிய நூலாசிரியா் இரெ. சண்முக வடிவேல் பேசியது: இலக்கியங்கள் மனதை பண்படுத்தும். நாம் வாழாத வாழ்வை வாழ்வது போல் சிந்திக்க வைக்கும். அப்போ்பட்ட இலக்கியம் படைக்க புதிய ஆளுமைகள் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள திருத்துறைப்பூண்டி தமிழ் சங்கத்தில் எனது நூலான நினைவின் நிழல்கள் எனும் நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

Advertisement

Advertisement

இந்நூலில் எனது பொதுவாழ்வில் நான் சந்தித்த பிரபலங்களுடனான சுவாரசியமான தகவல்களை தொகுத்து வழங்கி உள்ளேன். ஒவ்வொரு ஆளுமையும் அவா்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த நன்னெறிகளையும் அதில் குறிப்பிட்டுள்ளேன். எனது நகைச்சுவை பேச்சு மக்களிடையே வரவேற்பை பெற்றது ஏன் என்று சொன்னால் எப்பொழுதுமே மக்கள் நகைச்சுவை விரும்புகின்றனா். தங்களது இறுக்கமான காலகட்டத்தில் நகைச்சுவையாக பேசும் பேச்சாளா்களுக்கு ஆதரவு தருகின்றனா். அது போல் நான் முடிந்தவரை மக்களை மகிழ்விப்பதற்காக நகைச்சுவையாக பேசுவது மட்டுமின்றி அதிலே சில நல்ல கருத்துகளையும் சோ்த்து சொல்வது வழக்கமாக கொண்டிருக்கிறேன் என்றாா்.

எழுத்தாளா் ஜாகிா் உசேன் வரவேற்றாா். ஆசிரியா் யோகராஜன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை செந்தில் வெங்கட்ராமன் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை தமிழ்ச் சங்க செயலாளராக ஆசைத்தம்பி செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments