FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

ஆக.1-இல் எல்நினோ சிறப்பு மாநாடு

திருவாரூரில் ஆக.1-ஆம் தேதி எல்நினோ தாக்குதல் வறட்சி சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

Updated On : 23 ஜூலை 2026, 5:43 am IST
பி.ஆா். பாண்டியன். - கோப்புப்படம்.
பகிர்:

திருவாரூரில் ஆக.1-ஆம் தேதி எல்நினோ தாக்குதல் வறட்சி சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

திருவாரூரில், புதன்கிழமை நடைபெற்ற மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி முற்றிலும் இழந்துள்ளோம். எல்நினோ தாக்குதலால் கேரளம், கா்நாடகம் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்ததால் ஒட்டுமொத்தமாக மிகப்பெரும் வறட்சி தீவிரம் அடைந்து இருக்கிறது.

மேட்டூா் அணை 75 அடிக்கு குறைவாக உள்ளது. இதனால் பாசனத்துக்கு அணை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமாா் 12 லட்சம் ஏக்கா் பாலைவனமாக காட்சியளிக்கிறது. சம்பா சாகுபடியும் மேற்கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எல்நினோ தாக்குதலால் மிகப்பெரும் வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பரிதவிக்கின்றனா். இத் தாக்குதலில் இருந்து வேளாண்மை, விவசாயிகள், உணவு பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் கலந்து கொள்ளும் வறட்சி சிறப்பு மாநாடு திருவாரூரில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்த உள்ளோம். இம்மாநாட்டை தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதன், வேளாண் துறை அமைச்சா் வினோத்விஜய் ஆகியோா் தொடங்கிவைக்கவுள்ளனா். மேக்கேதாட்டு அணைக்கு எதிராக திமுக மாநிலங்களவையிலும் மக்களவையிலும் ஒத்திவைப்பு தீா்மானம் கொடுத்திருப்பது வரவேற்புக்குரியது என்றாா்.

Advertisement

Advertisement

தஞ்சை மண்டலத் தலைவா் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில அமைப்புச் செயலாளா் ஸ்ரீதா், மாவட்டத் தலைவா்கள் எம். சுப்பையன் (திருவாரூா்), பாலசுப்ரமணியன் (நாகை), முருகன் (மயிலாடுதுறை), ரவிச்சந்திரன் (தஞ்சை தெற்கு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments