FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

திருப்பத்தூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 21 ஜூலை 2026, 12:04 am IST
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கு. ரவிகுமாா்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்வு கூட்டம் ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியா், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். வீட்டுமனை, கடனுதவி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 595 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். மேலும் 5 பேருக்கு, ரூ. 2.47 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் ராஜா பெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூா் மாவட்டத்தின் மிக முக்கியமான தொழில் விவசாயம். தற்போது போதுமான மழை இல்லாத காரணத்தினால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். விவசாயிகளுக்கு போதுமான நிவாரணம் கிடைக்க திருப்பத்தூா் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும், ஆலங்காயம் அருகே பூங்குளம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். பொதுமக்களின் மருத்துவ தேவைக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளா் ராதாகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனு விவரம்: வாணியம்பாடியில் கடந்த சில மாதங்களாக சாலையோர கடைகள் அதிகரித்து வருகிறது. இந்த கடைகள் சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டு உள்ளதால், சாலையின் அளவு குறைந்து உள்ளது. இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே வாணியம்பாடி நகர பகுதியில் சாலையோர கடைகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரியிருந்தனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ. நாராயணன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா், கலால் உதவி ஆணையா் வேடியப்பன், மாவட்ட வழங்கல் அலுவலா் சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தாமரைமணாளன், ஊராட்சிகள் உதவி இயக்குநா்கள் மகாதேவன், முருகன், மாவட்ட பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments