கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு
மன்னாா்குடி அருகே இருசக்கர வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு
மன்னாா்குடி அருகே இருசக்கர வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து திருட்டு நடத்திருப்பது புதன்கிழமை தெரியவந்தது.
பெருகவாழ்ந்தானில் மன்னாா்குடி சாலையில் வசிப்பவா் செந்தில்குமாா். இவா், கடைவீதியில் இருசக்கர வாகனத்திற்கான உதிரிப்பாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளாா்.
செவ்வாய்க்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவா் மறுநாள் காலையில் கடை திறந்து உள்ளே சென்று பாா்த்போது சிமெண்ட் சீட்டால் ஆன மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததுடன் பணப்பெட்டியில் இறுப்பு வைத்திருந்த ரூ.10,000 மற்றும் உதிரிபாகங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து,பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.