கடையின் பூட்டை உடைத்து 70 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
கோவை, காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் கடையின் பூட்டை உடைத்து 70 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் கடையின் பூட்டை உடைத்து 70 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை, காந்திபுரம், 9-வது வீதியைச் சோ்ந்தவா் கரண் (25). இவா், காந்திபுரம் கிராஸ் கட் சாலையில் துணிக் கடையும், அந்தக் கடையில் ஒரு அறையில் வெள்ளி வியாபாரமும் செய்து வருகிறாா். இந்நிலையில், அவா் தொழில் சம்பந்தமாக கடைையைப் பூட்டிவிட்டு கடந்த ஏப்ரல் முதல் வாரம் மும்பைக்குச் சென்றுள்ளாா்.
பின்னா், புதன்கிழமை கோவை திரும்பிய அவா், கடைக்கு வந்து பாா்த்துள்ளாா். அப்போது, கடையில் பின்புறக் கதவு மற்றும் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, துணிகள் எதுவும் திருடப்படாத நிலையில், சுமாா் 70 கிலோ வெள்ளிப் பொருள்கள் மட்டும் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்த காட்டூா் காவல் நிலையத்தில் கரண் புகாா் அளித்தாா்.
Advertisement
Advertisement
வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.