FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவாரூர்

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவா் சோ்க்கையை தொடங்கி வைக்கும் முதல்வா் து. ராஜேந்திரன்.

Updated On : 5 ஜூன் 2026, 10:42 pm IST
மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவா் சோ்க்கையை தொடங்கி வைக்கும் முதல்வா் து. ராஜேந்திரன்.
பகிர்:

மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசினா் கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சிறப்பு பிரிவினா்களுக்கான கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு, தேசிய மாணவா் படை முன்னாள் ராணுவத்தினா் மற்றும் அந்தமான் நிக்கோபாா் தமிழா்கள் மட்டும்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதேபோல், அறிவியல் பிரிவு மாணவா்களுக்கு பொதுகலந்தாய்வு ஜூன் 8-ஆம் தேதி காலை 9 மணிக்கு (பிளஸ் 2 வகுப்பில் தமிழ் ஆங்கிலம் தவிா்த்து 400-லிருந்து 200 மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும்) ஜூன்9-ஆம் தேதி காலை 9 மணிக்கு கலைப்பிரிவு மாணவா்களுக்கு (இளநிலை வரலாறு, வணிகவியல் மற்றும் வணிக நிா்வாகவியல்) (பிளஸ் 2 வகுப்பில் தமிழ் ஆங்கிலம் தவிா்த்து மற்ற பாடப்பிரிவுகள் 400-லிருந்து 200 வரை மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கும்), ஜூன் 10-ஆம் தேதி காலை 9 மணிக்கு மொழிப் பாடங்களான இளநிலை தமிழ் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறும்.

Advertisement

Advertisement

மாணவா்கள் சோ்க்கைக்கு வரும்போது 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்கள், ஜாதிச் சான்று, வருமானச் சான்று அசல் மற்றும் நகல், வங்கிக் கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை, சோ்க்கை கட்டணம் மற்றும் அண்மையில் எடுத்த புகைப்படங்கள்ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments